உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை ஏறும் பக்தர்கள் பரிகார பூஜையில் பங்கேற்க வேண்டும்: இந்து முன்னணி

மலை ஏறும் பக்தர்கள் பரிகார பூஜையில் பங்கேற்க வேண்டும்: இந்து முன்னணி

திருவண்ணாமலை: மஹா தீப நெய் காணிக்கை செலுத்த, மலை ஏறி செல்லும் பக்தர்கள், பரிகார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும், என, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் கூறினார். இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி, திருவண்ணாமலை மலை மீது ஏறிச்சென்று, நெய் காணிக்கை செலுத்த 2,500 பக்தர்களை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது. கேதார்நாத் முதல், கைலாயம் வரை உள்ள அத்தனை சிவன் கோவில்களும் சிவனின் இருப்பிடங்கள். இந்த பூவுலகிலேயே, மலையே சிவனாக வணங்கப்படுவது திருவண்ணாமலையில் தான். மஹா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்த, மாலை அணிந்து விரதமிருந்து, 2,668 அடி உயர மலை மீது ஏறி செல்லும் பக்தர்கள், தீபம் முடிந்தவுடன் கோவிலில் நடக்கும், சண்டாள பரிகார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !