திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு இன்று கவசம் திறப்பு
ADDED :2899 days ago
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறப்பு நிகழ்வு, இன்று மாலை நடக்கிறது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி, உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வீற்றிருக்கும், ஆதிபுரீஸ்வரருக்கு, ஆண்டுக்கொரு முறை, கவசம் திறக்கும் நிகழ்வு நடைபெறும். இந்தாண்டு, இன்று மாலை, ஆதிபுரீஸ்வரருக்கு, கவசம் திறந்து, புணுகு சாம்பிராணி, தைலாபிஷேகம், மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு, தியாகராஜ பெருமான் மாடவீதி உற்சவம் நடைபெற உள்ளது. மூன்று நாட்களுக்கு பின், செவ்வாய் கிழமை இரவு, கவசம் மூடப்படும். ஆண்டுக்கு ஒரு முறை, இந்த மூன்று தினங்களில் மட்டுமே கவசமின்றி, சுவாமியை முழுமையாக தரிசிக்கலாம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவொற்றியூரில் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.