உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதர் கோவிலில் சொக்கப்பனை தீபம்

காஞ்சிபுரம் வரதர் கோவிலில் சொக்கப்பனை தீபம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், விஷ்ணு கார்த்திகை தீபத்தையொட்டி, சொக்கப்பனை தீபம், நேற்று ஏற்றப்பட்டது.காஞ்சிபுரத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக, வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை தீபத்தை யொட்டி, நேற்று முன்தினம், பரணி தீபம் ஏற்றப்பட்டது. விஷ்ணு கார்த்திகை தீபமான, நேற்று மாலை, கண்ணாடி அறையில் இருந்து, பெருமாள், உபயநாச்சியாருடன் திருமுற்றவெளியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அங்கு, 20 அடி உயர பனைமரத்தில், பனை ஓலைகள் சுற்றி கட்டப்பட்டு, சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பின், உற்சவர் மாடவீதி புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !