சபரிமலை வருமானம் ரூ.77 கோடி கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகம்!
ADDED :5100 days ago
சபரிமலை : மண்டல காலத்தில் கடந்த 28 நாட்களில் சபரிமலை வருமானம் 77 கோடி ரூபாயை கடந்தது. இது கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகமாகும். நவம்பர் 17-ம் தேதி முதல் நடைபெற்று வரும் மண்டல காலத்தில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது, கடந்த 28 நாட்களில் மொத்தம் வருமானம் 77 கோடியே 72 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் வருமானம் 58 கோடியே 78 லட்சமாக இருந்தது. அரவணை விற்பனையில் 33 கோடியே 68 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 24 கோடியே 28 லட்சத்துக்கு விற்பனை ஆகியிருந்தது. அப்பம் விற்பனையில் ஏழு கோடியே 25 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஐந்து கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியிருந்தது. காணிக்கையாக 26 கோடியே 64 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் 21 கோடியே 65 லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது.