மாமல்லபுரம் கோவிலில் திருமங்கையாழ்வாருக்கு சாற்றுமறை உற்சவம்
ADDED :3198 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், திருமங்கையாழ்வார் சாற்றுமறை உற்சவம் நடந்தது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாளை, திருமங்கையாழ்வார், ஸ்தலசயன பெருமாளை, 20 பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார். இக்கோவிலில் வீற்றுள்ள அவருக்கு, அவரது பிறந்த கிருத்திகை நட்சத்திர நாளான நேற்று முன்தினம், சாற்றுமறை உற்சவம் நடந்தது.அன்று மாலை, பெருமாள், தேவியர், ஆழ்வாருக்கு, சிறப்பு திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமுறை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, வீதியுலா சென்று, கோவிலை அடைந்ததும், திருப்பாவை சாற்றுமறையைத் தொடர்ந்து, ஆழ்வாருக்கு, பெருமாள் பரிவட்ட மரியாதை அளித்தார்.