திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் சென்று அருள்பாலிப்பு
ADDED :2888 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சமேத அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் நேற்று கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த, 2ம் தேதி மஹாதீபம் ஏற்றப்பட்டது.
தீபம் தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். தீப திருவிழா முடிந்து தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்ப திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவம், அதனை தொடர்ந்து பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. சமேத அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஸ்வாமிக்கு மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.