உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரிபட்டியில் 108 சங்காபிஷேகம்

சிவபுரிபட்டியில் 108 சங்காபிஷேகம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்மஸம்வர்த்தினி சமேத சுயம்பிரதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு 108 சங்குகளைக்கொண்டு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு இந்த சங்குகளைக்கொண்டு புனித நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் லிங்கத்திருமேனியாக சுவாமி அருள்பாலித்தார். இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !