விநாயகர் கோவில்களில் நாளை சங்கடஹர சதுர்த்தி
திருவள்ளூர்;விநாயகர் கோவில்களில், நாளை, சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.பவுர்ணமியை தொடர்ந்து, 4வது நாள், சதுர்த்தி திதி அன்று, சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. நாளை, திருவள்ளூர் நகரில், ரயிலடி வழிதுணை விநாயகர் கோவில், ஆயில் மில் வெற்றி வினாயகர் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில் வரசித்தி விநாயகர் கோவில், பெரியகுப்பம் காரிய சித்தி விநாயகர் கோவில், மகா வல்லப கணபதி கோவில் உட்பட விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி அன்று, அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மகா வல்லப கணபதி கோவிலில், மாலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமம், பிரார்த்தனை தேங்காய் கட்டுதல், மகா தீபாராதனை, இரவு, நடைபெறும். சோழவரம் அடுத்துள்ள, பஞ்சேஷ்டி நத்தம் கிராமத்தில், ஆனந்த வல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னதியில், 7ம் தேதி காலை, சங்கட நிவாரண ஹோமம் துவங்குகிறது. 1008 மூல மந்திர ஹோமம் நடைபெறும். பிற்பகல், 2:00 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறும்.