பந்தளம் கோவில் இன்று மீண்டும் திறப்பு
ADDED :2912 days ago
பந்தளம்: மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணத்தை தொடர்ந்து அடைக்கப்பட்ட பந்தளம் சாஸ்தா கோவில், இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. அய்யப்பனுக்கு மகர விளக்கு நாளில் அணிவிக்கும் திருவாபரணம், பந்தளம் அரண்மனையில் உள்ளது.மண்டல சீசன் துவங்கிய பின், பக்தர்கள் இங்கு சென்று, திருவாபரணத்தை தரிசிப்பது வழக்கம். அரண்மனை அருகே, சாஸ்தா கோவில் உள்ளது. இங்கும் பக்தர்கள் வழிபட்டு, காணிக்கை செலுத்துவர். இந்த கோவிலில் இருந்தே, சபரிமலைக்கு திருவாபரணம் புறப்படும். கடந்த நவ., 25ம் தேதி, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி, அம்பா தம்புராட்டி இறந்ததை தொடர்ந்து, அரண்மனையும், கோவிலும் அடைக்கப்பட்டன. இன்று காலை, மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. முன்னதாக, சுத்திகலச பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் இன்று முதல் பந்தளம் சென்று, திருவாபரணத்தை தரிசிக்க முடியும்.