பழநி அழகுநாச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2874 days ago
பழநி : பழநி மலைக்கோயில் கிரிவீதி, சின்னவிநாயகர் அழகுநாச்சியம்மன் கோயிலில், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பழநி கிழக்குகிரிவீதி சின்னவிநாயகர், அழகு நாச்சியம்மன் கோயிலில் 1999ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்து. அதன்பின் 18 ஆண்டுகளுக்குப்பின் இன்று (டிச.6) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11மணிக்கு மருந்து சாற்றுதல், மூன்றாம்கால யாகசாலைபூஜை என 4 காலயாக பூஜை நடைபெற்றது. இன்று (டிச.,6ல்) காலை 6:25மணிக்கு அழகு நாச்சியம்மன், சின்னவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்திருந்தனர்.