கபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம்
சென்னை : மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மூலவருக்குஇ இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ளஇ ௮கிலோ தங்கத்தால் ஆனஇ நாகாபரணம் காஞ்சி மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி நாளை சமர்ப்பிக்கிறார். மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்குஇ சிறப்பு பூஜை நேரங்களில் செப்பில்இ தங்க முலாம் பூசிய நாகாபரணம் சார்த்தப்படுகிறது. இந்நிலையில்இ மூலவருக்கு சொக்க தங்கத்தால் ஆன நாகாபரணம் வழங்கஇ கோவில் தக்கார் விஜயகுமார் ரெட்டிஇ பிரீத்தி ரெட்டி ஆகியோர் முன்வந்தனர். இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில்இ ௮கிலோ எடையுள்ள நாகாபரணத்தை உம்மிடி பங்காரு ஸ்ரீ ஹரி சன்ஸ் மூலம் செய்து முடிக்கப்பட்டது. நாளைஇ காலைஇ ௧௧:௩௦ மணிக்கு காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால்இ மூலவர் கபாலீஸ்வரருக்குஇ தங்க நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பின்இ மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு திரிவேணி சங்கமம் எனும் பெயரில் பரதம்இ ஒடிசிஇ கதக் ஒருங்கிணைந்த நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.