உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செத்தவரை சனி பகவான் கோவில் நாளை கும்பாபிஷேகம்

செத்தவரை சனி பகவான் கோவில் நாளை கும்பாபிஷேகம்

செஞ்சி : செத்தவரை ஸ்ரீசிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் சனி பகவான் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை நடக்க உள்ளது. செஞ்சி தாலுகா செத்தவரை-நல்லாண்பிள்ளை பெற்றாள் ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் கோவிலில் மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவில் உள்ளது. ந்த ஆசிரமத்தில் புதிதாக ஸ்ரீயோக சர்வேஸ்வர சனி பகவான் கோவில் கட்டி உள்ளனர். தன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை நடக்க உள்ளது. தை முன்னிட்டு ன்று காலை 6:00 மணிக்கு கோபூஜையும் 7:30 மணிக்கு வேள்வியும் மாலை 3:00 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு மண் எடுத்தல் காப்பு அணிவித்தல் 6:30 மணிக்கு வேள்வி சாலை எழுந்தருளுதல் ரவு 7:00 மணிக்கு முதல் கால வேள்வியும் 9:30 மணிக்கு வேள்வி நிறைவும் 10:30 மணிக்கு சனீஸ்வரபகவானுக்கு காப்பு அணிவித்தலும் நடைபெற உள்ளது.

நாளை காலை 6:00 மணிக்கு பெருமானுக்கு ரண்டாம் கால வேள்வியும் 6:30 நாடி சந்தானம் 9:30 மணிக்கு ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் தலைமையில் திருக்குடங்கள் வேள்வி சாலையில் ருந்து புறப்படுதலும் நடக்கிறது. தொடர்ந்து 10:30 மணிக்கு ஸ்ரீயோக சர்வேஸ்வர சனி பகவான் கோவில் திருக்குட நன்னீராட்டும் நடக்க உள்ளது. தொடர்ந்து 11:00 மணிக்கு தச தரிசன வழிபாடும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீசிவஜோதி மோனசித்தர் தர்ம பரிபாலன ஆசிரம டிரஸ்டிகள் உறுப்பினர்கள் பக்தர்கள் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !