ஐயப்பன் கோவிலுக்கு யானை வாகனம் வந்தது
ADDED :2867 days ago
திருப்பூர்:திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலுக்கு, ஒன்றரை டன் எடையில், புதிதாக யானை வாகனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், சுவாமி ஆறாட்டு உற்சவத்தை தொடர்ந்து, யானை மீது ஐயப்பன் எழுந்தருளி, ஊர்வலம் நடப்பது வழக்கம். ஊர்வலத்துக்கு யானை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என்பதால், கடந்தாண்டு, புதிதாக ரதம் செய்யப்பட்டு, சுவாமி ஊர்வலம் நடந்தது. இந்தாண்டு, மரத்தினால் யானை உருவம் செய்யப்பட்டுள்ளது. ஒரே வாகை மரத்தில், ஏழு அடி உயரம், ஏழரை அடி அகலத்தில், ஒன்றரை டன் எடையில், தத்ரூப யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல், யானை மீது, சுவாமி ஐயப்பன் ஊர்வலம் நடைபெறவுள்ளது.