உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து

திருப்பதி: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் 23-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக கோவில்நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: தொடர் விடுமுறையால் வரும் 23-ம் தேதி முதல் ஜனவரி முதல்வாரம் வரையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !