உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஐயப்பன் கோவில் ஸ்ரீ பகவதி சேவை

திருப்பூர் ஐயப்பன் கோவில் ஸ்ரீ பகவதி சேவை

திருப்பூர் ;திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நேற்று நடந்த, ஸ்ரீ பகவதி பூஜை சேவை யை, ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.காலேஜ் ரோட்டில் உள்ள, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை கொடியேற்று விழா, கடந்த, 6ல் நடந்தது. நேற்று முன்தினம், நவ கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடந்தது.நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மகா கணபதி ஹோமமும்; 9:00 மணிக்கு, நவ கலச யாக பூஜை மற்றும் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகமும் நடந்தது. நேற்று மாலை, 6:45 மணிக்கு, பகவதி சேவை நடந்தது. இன்று காலை, நவ கலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை; நாளை, தாயம்பகை மேளம், சுவாமி பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !