ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற பூக்குழி திருவிழா
ADDED :2971 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த வ.வேப்பங்குடியில், ஐயப்ப, முருக பக்தர்கள் சார்பில், நான்காம் ஆண்டு பூக்குழி திருவிழா நடந்தது. கடவூர் அடுத்த, வரவனை கிராமம், வேப்பங்குடியில், ஐயப்ப பக்தர்கள் சார்பில், நான்காம் ஆண்டு பூக்குழி திருவிழா, காளியம்மன் கோவில் முன் உள்ள திடலில் நடந்தது. இத்திருவிழா கடந்த, 4ல், தொடங்கியது. கடந்த, 10ல் காப்பு கட்டப்பட்டது. நேற்று, சக்தி அழைத்து, நெய் விளக்கேற்றியபின், ஐயப்ப பக்தர்கள், பூக்குழி இறங்கினர். விழாக்குழு சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.