சென்னிமலை கோவிலில் கார்த்திகை மாத சோமவார விரதம் நிறைவு
சென்னிமலை: கார்த்திகை மாத சோமவார விரதம் கடைபிடித்தவர்கள், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், சங்கு பூஜை மற்றும் கலச வேள்வி பூஜை நடத்தி, விரதத்தை நேற்று நிறைவு செய்தனர்.
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படும். கடந்த நவ.,20ல் கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையில், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் விரதம் தொடங்கினர். அன்று முதல் விரதம் அனுசரித்தனர். கடைசி திங்கட்கிழமையை ஒட்டி, கைலாசநாதர் கோவிலில், 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜை நேற்று நடந்தது. இதை தொடர்ந்து கைலாசநாதருக்கு அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள், தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்தனர். நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
* கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், சோமவார நாட்களில், சங்காபிஷேகம் நடந்தது. கடைசி வாரமான நேற்றும், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.