சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா உற்சவம்: பந்தல் அமைக்கும் பணி துவக்கம்
ADDED :2856 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி அன்று சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று உற்சவக்கொடி ஏற்றப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி நடராஜர் தேரோட்டம், 2ம் தேதி மார்கழி ஆரூத்ரா தரிசன சித்சபை பிரவேசம் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி நடராஜர் கோவிலில் கடந்த வாரம் கிழக்கு கோபுரம் அருகில் பந்தகால் முகூர்த்தம் நடந்தது. தொடர்ந்து கிழக்கு சன்னதியில் 2 லட்சம் ரூபாய் செலவில் பந்தல் அமைக்கும் நேற்று துவங்கியது. விழா ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் பொதுதீட்சிதர்கள் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.