மீனாட்சியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :2854 days ago
சாயல்குடி:சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு,உப்பில்லாமல் வடிக்கப்பட்ட 30 கிலோ பச்சரி சாதம் திருமேனியில் சாத்தப்பட்டது. மழைபெய்ய வேண்டியும், உலகநன்மைக்காகவும் பூஜைகளை ரவிச்சந்திர குருக்கள் செய்தார்.அன்னதானம் நடந்தது.