உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) திருமணம் நடக்கும்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) திருமணம் நடக்கும்

அன்புள்ளம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட நன்மைகள் அதிகரிக்கும். திருப்தியற்ற நிலையில் இருந்த சூரியன் 10-ம் இடம் வந்து நற்பலனை தர தொடங்குவார். புதன்,  ஜன. 4க்கு பிறகு தனுசு ராசிக்கு வந்து நன்மை தருவார். சுக்கிரன், டிச. 21வரை விருச்சிக ராசியில் இருந்து  நற்பலன் கொடுப்பார். ராசிக்கு 11ல் இருக்கும் கேதுவின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சனி பகவான் டிச.19ல், உங்கள் ராசிக்கு 10ம் இடத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனியால்  தொழிலில் சிறு பின்னடைவு ஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம்.

சூரியனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.உங்கள் ஆற்றல் மேம்படும். ஜனவரி 4-ந் தேதிக்கு பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும்.  

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் உருவாகும். பணவரவு, சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  டிச.26,27ல் சகோதரிகள் வகையில் உதவி கிடைக்கும். டிச.21,22ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.1,2ல் அவர்கள் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜன.4ல் சிலரது பொல்லாப்பை சந்திக்கலாம். மனதில் வேதனை வரலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். இதன் பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியிடையே அன்பு மேலோங்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு கடந்த மாதம் இருந்த பின்தங்கிய நிலை இருக்காது. லாபம் அதிகரிக்கும்.  டிச.23,24,25,28,29ல் சிறுசிறு தடைகள் வரலாம். ஜன,5,6,7ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக் கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

பணியாளர்களுக்கு ஜன.4வரை வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.  அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவது தாமதம் ஆகலாம். உங்கள் பணியை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலை நிமித்தமாக பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். டிச.18,19,20ல் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம்.

கலைஞர்களுக்கு மாத முற்பகுதி சாதகமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம்.  மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். மாத பிற்பகுதியில்  புதன், சாதகமான இடத்திற்கு வருவதால் கல்வியில் வளர்ச்சி காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக் கும்.  விவசாயிகள் அதிகமாக உழைத்தால் தான் வருமானம் கிடைக்கும்.  கால்நடைச் செல்வம் சிறப்படையும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். கணவன், குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். குழந்தைகளால் பெருமை பெறலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஜனவரி8,9ல் சிறப்பான பலனை காணலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிசம்பர்30,31ல் புத்தாடை, நகை வாங்கலாம்.

* நல்ல நாள்: டிச.18, 19, 20, 21, 22, 26, 27, 30, 31 ஜன. 5, 6, 7, 8, 9
* கவன நாள்: ஜன. 10, 11 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 3, 9  நிறம்: செந்தூரம், சிவப்பு

* பரிகாரம்:
●  சனிபகவானுக்கு  எள் எண்ணெய் தீபம்
●  செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு
●  ராகு காலத்தில்  காளிக்கு பூஜை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !