மார்கழி அமாவாசை ராமேஸ்வரத்தில் நீராடிய பக்தர்கள்
ADDED :3163 days ago
ராமேஸ்வரம் : மார்கழி அமாவாசையை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மார்கழி அமாவாசையான நேற்று, ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து விட்டு, கடலில் புனித நீராடினார்கள். பின் கோயிலினுள் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீராடினர். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.