சிம்மபுரீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா
ADDED :2889 days ago
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் சுகுந்த குந்தளாம்பிகை சமேத சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், இன்று சனிப் பெயர்ச்சி விழா நடக்கிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரில், புகழ்பெற்ற சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில், காவிரிக் கரையில் அமைந்துள்ளது. சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, கோவிலில், சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம், அபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் வேல்முருகன் செய்துள்ளார்.