அனுமன் ஜெயந்தி: 1,008 வடை மாலை
ADDED :2948 days ago
குமாரபாளையம்: நடன விநாயகர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. குமாரபாளையம், புத்தர் தெரு, நடன விநாயகர் கோவிலில், 1,008 வடைகள் கொண்ட மாலையுடன் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நடன விநாயகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. சிறப்பு பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்கள் பெருமளவில் திரண்டு சுவாமியை வணங்கினர். பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.