தேங்காயை அர்ச்சனை தட்டுடன் கொடுப்பது, சிதறுகாய் விடுவது எது சிறந்தது?
ADDED :2882 days ago
இரண்டுமே சிறப்பு தான். அர்ச்சிப்பதன் மூலம் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு அதைப் பிரசாதமாக நாம் வீட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம். செயல்களில் தடை நீங்க குறிப்பாக முதற்கடவுளான விநாயகர் சந்நிதியில் சிதறுகாய் இடுவர். இதனால் தடைகள் அகல்வதோடு மற்றவர்களுக்கும் அந்த தேங்காய் பிரசாதமாகி விடுகிறது. சொல்லப்போனால், முன்னதை விட பின்னதை பொதுநலம் என்று கூட கொள்ளலாம்.