உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்பது ஏன்?

சனி பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்பது ஏன்?

நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாத பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என ஐந்து வகை பிரதோஷங்கள் உண்டு. தினமும் மாலை நாலரை முதல் ஆறுமணி வரையிலான நேரம் நித்ய பிரதோஷம். இந்நேரத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி,களைப்புற்றிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் அமைதிப்படுத்துவார். இதுவே வளர்பிறை திரயோதசியுடன் கூடினால் பட்ச பிரதோஷம். தேய்பிறை திரயோதசியானால் மாத பிரதோஷம் என்பர். தேய்பிறை, சனிக்கிழமை மற்றும் திரயோதசி மூன்றும் இணைந்தால் மகா பிரதோஷம் என கூறுவர். மகா பிரதோஷ நாளில் தான் பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டு சிவபெருமான் உலகை காப்பாற்றினார். அந்த வேளையில் நந்திகேஸ்வரரின் மயக்கம் நீங்க, காப்பு அரிசி கொடுக்கப்பட்டது. எனவே இது விசேஷமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !