உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

வடமதுரை : வடமதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் மணி மண்டபத்தில் 47ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. இவ்விழாவிற்காக பல சிவ வைணவ கோயில்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. பால்கேணி மேட்டில் இருந்து தீர்த்தகுடங்களில் ஒன்றையும் யானையும், மற்றவற்றை பக்தர்களும் மேற்கு, வடக்கு ரத வீதிகள் ஊர்வலமாக வழியே எடுத்து வந்தனர். ஐயப்பன் மணி மண்டபத்தில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், 18 படி அபிஷேகம், பூஜை, கஜ(யானை) பூஜை, 108 சங்கு, 108 கலச அபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் காமராஜ், ராம்தாஸ், நந்தகுமார், பிரபு, இளங்கோ, முத்துச்சாமி உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் சேவை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !