உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை

கோவில்களில் புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை

அமராவதி: வரும், ஜன., 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது; சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது என, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு, அம்மாநில இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜன., 1ம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில் கொண்டாடக் கூடாது; இது, நம் வேத சாஸ்திரத்துக்கு எதிரானது. இந்த நாளில், கோவில்களில் சிறப்பு விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிப்பது, சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது. தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோவில், விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள சிவாலயம் போன்ற புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !