உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் சென்னை இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து மன்ற நிறுவனர் கணேசன் கூறியதாவது: ஒவ்வொரு மாத 4வது ஞாயிறு கோயில் உழவாரப் பணியில் ஈடுபடுகிறோம்.இதுவரை தமிழகத்தில் 191 கோயில் களில் உழவாரப் பணி செய்துள்ளோம். தற்போது 300 பேர் குழுவினர் மதுரை வந்து உள்ளனர்.

தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், இம்மையிலும் நன்மை தருவார் கோயில், கூடலழகர் கோயில்களில் உழவாரப் பணியில் இக் குழுவினர் ஈடுபட்டனர். கோயில்களின் துாய்மை, நலன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கயிலாய வாத்தியம் முழங்க பேரணியிலும் ஈடுபடுகிறோம். 16 ஆண்டுகளாக தொடரும் இறைபணியால் மக்கள் கோயில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பெற்றுள்ளனர், என்றார். முன்னதாக இக்குழுவினர் திருவாப்புடையார் கோயிலை சுற்றி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !