உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரியாத்திரை குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

சபரியாத்திரை குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

திருப்பூர்: திருப்பூர், மண்ணரை, ஸ்ரீதர்மசாஸ்தா சபரியாத்திரை குழு சார்பில், 42ம் ஆண்டு அன்னதான ஆன்மிக பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு, 108 சங்காபிஷேகம், கலாஷாபிஷேகம், ஆராட்டு மற்றும் ஆராதனை, சுவாமி திருவீதி உலா, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 22ம் தேதி, மகா கணபதி ஹோமும், சங்காபிஷேகமும் விமரிசையாக நடந்தது. அடுத்து, 23ம் தேதி கொடுமுடி காவிரியில், தர்மசாஸ்தாவுக்கு ஆராட்டு விழாவும், மதியம் அன்னதானம் நடைபெற்றது. அன்று மாலை, ஐயப்ப சுவாமி திருவீதியுலா, வாண வேடிக்கை, மேள, தாளத்துடன் நடைபெற்றது. நேற்று, அபிஷேகம், ஆராதனையுடன் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !