திருக்கழுக்குன்றத்தில் மாணிக்கவாசகர் உற்சவம்
ADDED :2848 days ago
திருக்கழுக்குன்றம் : சமயகுரவர் நால்வரில்ஒருவரான மாணிக்கவாசகர் உற்சவம், திருக்கழுக்குன்றத்தில், நேற்று கோலாகலமாக தொடங்கியது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை நான்கு வேதங்களாலும், சமயகுரவர்கள் நால்வராலும் புகழ்மாலை பாடியுள்ளனர்.சிறப்பு மிக்க இவ்வூரில் சித்திரை பெருவிழா, ஆடிப்பூர விழா போன்ற விழாக்களுடன், மாணிக்கவாசகர் உற்சவமும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டின், 10 நாள் விழா நேற்று துவங்கியது. தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகருக்கு காலை, 5:30 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. பின், மாணிக்கவாசகர் உலா வரும் வைபவமும் நடந்தது.