வைகுண்ட ஏகாதசி விழா: லட்டு தயாரிப்பு தீவிரம்
ADDED :2844 days ago
ஈரோடு: வைகுண்ட ஏகாதசி விழாவில், பக்தர்களுக்கு வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 29ல் நடக்கிறது. அதிகாலை, 3:30 மணிக்கு திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனையுடன், காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் எனும், பரம பத வாசல் திறக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இவர்களுக்கு பிரசாதமாக வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக, 12 மூட்டை கடலைமாவு, நெய், 100 கிலோ, 750 கிலோ சர்க்கரை, 20 கிலோ முந்திரி, 15 கிலோ திராட்சை, 300 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக, லட்டு தயாரிப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.