பஞ்சவடீ கோவிலில் திருப்பாவை உபன்யாசம்
ADDED :2843 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் வரும் 28 மற்றும் 29ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருப்பாவை உபன்யாசம் நடக்கிறது. புதுச்சேரி - திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில் அமைந்துள்ள, 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவிலில், வரும் 28ம் தேதி மற்றும் 2 ம் தேதி ஆகிய இரு நாட்கள், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 வரை, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசம் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் உபன்யாசத்தில் பங்கேற்கும்படி, பஞ்சவடீ ஜெயமாருதி சேவா டிரஸ்டினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.