அய்யப்ப சாமிக்கு 108 கலச அபிஷேகம்
ADDED :2901 days ago
புதுச்சேரி: புதுச்சேரி சின்னக்கடை எல்லையம்மன் கோவிலில், அய்யப்ப சாமிக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. எல்லையம்மன் கோவிலில் அமைந்துள்ள தர்ம சாஸ்தா ஐயப்ப சாமி கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 25ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அய்யப்ப சாமிக்கு 108 கலச அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8.15 மணிக்கு 108 கலச தீர்த்த குடம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 9.15 மணிக்கு அய்யப்ப சாமிக்கும், உற்சவருக்கும் 108 கலச தீர்த்த அபிஷேகம் மற்றும் நெய் அபிஷேகம் நடந்தது. காலை 11.15 மணிக்கு கன்னி பூஜை தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.