ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2901 days ago
சின்னாளபட்டி : சின்னாளட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே ஐயப்பன் கோயிலில், தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு விசேஷ அபிேஷகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சரண கோஷத்துடன், திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர், மகா அபிேஷகத்துடன் தீபாராதனை நடந்தது. அன்னதான விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.