உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குறிச்சியில் மண்டல பூஜை

செங்குறிச்சியில் மண்டல பூஜை

சாணார்பட்டி : திருமலைக்கேணி அருகே செங்குறிச்சியில் பொன்னம்பல ஐயப்பன் ஆலய மணி மண்டபத்தில் மண்டல பூஜை நடந்தது. மதுரை சம்பட்டிபுரம் ஐயப்ப சேவா சங்கம் மற்றும் செங்குறிச்சி பகுதி பக்தர்கள் இணைந்து பஜனை நடத்தினர். சுவாமியின் உருவ படம் மற்றும் 18 படிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜை நடந்தது. உலக அமைதி வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. வருகிற ஜன., 1 அன்று இப்பகுதியை சேர்ந்த பக்தர்களின் சபரிமலை யாத்திரை நடக்க உள்ளது. பொன்னம்பல ஐயப்பன் அறக்கட்டளை நிர்வாகி சேது மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !