உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஜன.1ல் ஆருத்ர அபிஷேகம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஜன.1ல் ஆருத்ர அபிஷேகம்

திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர்கோவிலில், வரும், ஜன., 1ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், 2ம் தேதி, அதிகாலையில்கோபுர தரிசனமும் நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது.இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம், வெகு விமரிசையாக நடந்து வருகிறது.அந்த வகையில், இந்தாண்டிற்கான, ஆருத்ரா அபிஷேகம், வரும், ஜன.1 ம் தேதி, இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால் விடிய, விடிய அபிஷேகம் துவங்கி, ஜன.2ம் தேதி, அதிகாலை, 3:00 மணி வரை நடைபெறும்.

தொடர்ந்து நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் கோவில் வளாகத்தில் வீதியுலா வருவார். அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் கோவில் முன் வந்து, அருள்பாலிப்பார். அப்போது கோபுர தரிசனம் நடைபெறும்.இவ்விழாவில், தமிழகம்ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் வந்திருந்து மூலவரை வழிபட்டும், நடராஜ பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் பார்த்து வழிபடுவர். பக்தர்கள் ஆருத்ரா அபிஷேகத்தை பார்க்கும் வகையில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தற்காலிக தகடுகளால் நிழற்குடை பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் வளாகம் முழுவதும், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும், மாவட்டஎஸ்.பி., சிபி சக்கரவர்த்தி தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், பக்தர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !