உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு ஐயப்பன் கோவில் திருவிளக்கு ஊர்வலம்

ஈரோடு ஐயப்பன் கோவில் திருவிளக்கு ஊர்வலம்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் ஐயப்பா சேவா நிறுவன ஐயப்பன் கோவிலில், மகரவிளக்கு மண்டல பூஜை, நடந்து வருகிறது.  காலை இரண்டாம் வார புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில், தற்காலிகமாக அமைத்த குளத்தில் ஐயப்பன் ஆராட்டு நடந்தது. இரவில் திருவிளக்கு ஊர்வலம் நடந்தது. முன்னதாக, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் முன்பு தர்ம சாஸ்தாவுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி வர, கலந்து கொண்ட பெண்கள், கையில் திருவிளக்கு ஏந்தியபடி, சரணம் ஐயப்பா கோஷம் முழங்க சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !