உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிசய நந்தி தீர்த்தம்!

அதிசய நந்தி தீர்த்தம்!

கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரத்தில் உள்ளது ‘தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோயில், ‘கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கோயில்! இக்கோயிலில் உள்ள நந்திதேவர் திருச்சிலையின் வாயில் இருந்து அதிசயமாக எப்போதும் நீர் பெருகிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக, அனைத்துச் சிவன் கோயில்களிலும் நந்திதேவரின் சிலை, மூலவர் சிவலிங்கத்துக்கு நேராக அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் நந்திதேவரின் சிலை, சிவனின் தலைக்கு மேல் அமைந்துள்ளது. நந்தியின் வாயில் இருந்து ஊறும் நீரானது சிவலிங்கத்துக்கு மேல் எப்போதும் அபிஷேகமாகப் பொழிக்கிறது.! நந்தியெம்பெருமானின் வாயிலிருந்து வெளியாகும் தண்ணீர் எங்கே உருவாகி, எப்படி வெளி வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. இந்தத் தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இந்நீரைப் பருகினால் தீராத நோய்கள் அனைத்தும் தீர்கிறது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சிவபெருமானை அபிஷேகித்த பிறகு, இந்தத் தீர்த்தம் சன்னிதியின் எதிரில் உள்ள குளத்தில் கலக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !