கம்பங்கூழ் பிரசாதம்
ADDED :2886 days ago
ஈரோடிலிருந்து கரூர் செல்லும் வழித்தடத்தில், காங்கயம்பாளையத்தில் உள்ளது நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில். காவிரி ஆற்றின் நடுவில், பரிசலில் சென்று தரிசிக்கும் வகையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில், வீற்றிருந்து அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு சித்திரை முதல் நாள் மட்டும் தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. அன்று பக்தர்களுக்கும் அதுவே பிரசாதமாகத் தரப்படுகிறது.