நாயன்மார்களாக பணியாளர்கள்....
ADDED :2886 days ago
திருவாரூர் கோயிலில் இன்றளவும் பணியாற்றி வரும் பணியாளர்கள், நாயன்மார்கள் பெயர்களால் சுட்டிக்காட்டப்படுவது மரபாக உள்ளது. மெய்க்காவலர் விறன் மிண்டர் எனவும், மாலை தொடுப்பவர் செருத்துணை நாயனார் எனவும், கோயிலில் தீபமேற்றுபவர் நமிநந்தியடிகள் எனவும், கோயில் நிர்வாக அதிகாரி தண்டியடிகள் எனவும், அடியார்களை உபசரிப்பவர் ஏயர்கோன் கலிக்காமர் எனவும், தூதுவளை இலை கொடுப்பவர் சோமாசி மாறர் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.