பரமக்குடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :3046 days ago
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து கருப்பண சுவாமி அபிேஷகம், ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் சர்வ அலங்காரங்களுடன்திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு அன்னதானம்நடந்தது.பரமக்குடி ஐந்து முனை ரோடு ஐயப்பன் கோயிலில் பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றிற்கு சுவாமிகள்ஊர்வலமாக சென்றனர். அங்கு தீர்த்தம், பால்குடங்களை எடுத்து வந்துபக்தர்கள் தொடர்ந்து பெரியபஜார் வழியாக கோயிலை அடைந்தனர்.