மோகினி அலங்காரத்தில் அழகிரிநாதர்
ADDED :2887 days ago
சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. பகல் பத்து உற்சவத்தின், 10ம் நாளான நேற்று, மோகினி அலங்காரத்தில், அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர். அதேபோல், இளம்பிள்ளை, வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்றிரவு, மோகினி அலங்காரத்தில், முத்து பல்லக்கில் சுவாமி வீதி உலா சென்றார்.