ஐயப்ப பக்தர்கள் பாத யாத்திரை குழு சார்பில் 32ம் ஆண்டு விழா
ADDED :2888 days ago
கரூர்: கரூர், அன்னகாமாட்சி அம்மன் கோவிலில், ஐயப்பன் பக்தர்கள் பாத யாத்திரை குழுவின், 32ம் ஆண்டு விழா நடந்தது. அதிகாலையில் உற்சவர் ஐயப்பனுக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்களும், தொடர்ந்து நெய் அபி?ஷகமும் நடந்தது. அதன் பின், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மலர்களால் காட்சியளித்தார். பின், ஐயப்பன் உற்சவர் உள்ள பதினெட்டு படிகளிலும், மலர்களால் பூஜை செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டன. கோவில் பின்புறமுள்ள மண்டபத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது.