விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்:சிவன் மலையில் மாலையில் கிரிவலம்
ADDED :2848 days ago
கூடலுார்:கூடலுாரில் விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கூடலுார் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், நேற்று முன்தினம், நள்ளிரவு இளைஞர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் புத்தாண்டை கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். நேற்று காலை, கூடலுார் விநாயகர் கோவில், முனீஸ்வரன் கோவில், மேல்கூடலுார் மாரியம்மன் கோவில், நந்தட்டி மாதேஸ்வரன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நம்பாலாகோட்டை சிவன் மலையில், நேற்று மாலையில் கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து பகுதிகளிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.