திருவத்திமலை கோவிலில் பவுர்ணமி சிறப்பு யாகம்
ADDED :2803 days ago
செஞ்சி : மேல்தாங்கல் திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. செஞ்சி தாலுகா மேல்தாங்கல் திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோவி லில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது. மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கணபதி, மகாலட்சுமி, குபேர யாகமும், கலச நீர் கொண்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு ஊஞ்சல் சேவையும், பஜனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கினர்.