உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

சங்கராபுரம்: சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் புதிதாக கொடி மரம் பிரதிஷ்டை செய் யப்பட்டது.

விழாவிற்கு, துளுவ வேளாளர் சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார். ஆசிரியர் பச்சை யான், சின்னசாமி, முருகன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகிதித்தனர். செம்பராம்பட்டு வெங்கட் குருக்கள் தலைமையில், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.

இதில், அரிமா மாவட்ட தலைவர் துரைராஜ், பாலசுப்ரமணியன், கேசவன், சீனுவாசன், பெரிய தம்பி, அரசு, மணிகண்டன், சரவணன், கிருஷ்ணன், திருமலை, பாபு, சுப்ரமணியன், வேலாயுதம், கிருபா, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !