பந்தளராஜா யாத்திரை குழுவினர் 23ம் ஆண்டாக சபரிமலை பயணம்
ADDED :2867 days ago
புன்செய்புளியம்பட்டி: பந்தளராஜா யாத்திரைக் குழுவின், 23ம் ஆண்டு விழா, புன்செய்புளியம்பட்டியில் நடந்தது. புன்செய்புளியம்பட்டியில், பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று, ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். நடப்பாண்டு, 23வது ஆண்டாக, இருமுடி கட்டும் நிகழ்ச்சி, காமாட்சியம்மன் கோவிலில் நேற்று மாலை நடந்தது. தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் சிலைக்கு முன்பாக, 18 படிகள் அமைத்து, சர்வ அலங்காரத்தில் அமைக்கப்பட்ட அம்பலத்தில் பூஜை நடந்தது. பின், 18படிகளிலும், மலர்களால் பூஜை செய்து, விளக்குகள் ஏற்றப்பட்டன. கோவில் மண்டபத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. "பச்சப்புள்ள, பவளப்புள்ள" குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. நிறைவாக, 60 ஐயப்ப பக்தர்கள், குருசாமி தலைமையில் இருமுடி கட்டி, சபரிமலை புறப்பட்டனர்.