மேலூர் சிவன் கோயில் அதிகாரிகள் ஆய்வு
ADDED :2866 days ago
மேலுார், மேலுாரில் 19ம் நுாற்றாண்டை சேர்ந்த அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் முடிந்து 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கோயில் முழுவதும் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. கோயில் சிதிலமடைந்து வருவது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.இதன் எதிரொலியாக, தொல்லியல் துறை ஓய்வுபெற்ற உதவி பொறியாளர் நாராயணன், நிர்வாக அதிகாரி ஜெயதேவி ஆகியோர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், புதிதாக கட்டப்பட்ட இடங்களை மாற்றவும் பரிந்துரைத்தனர்.