உன் வேலையை நீயே செய்!
ADDED :2873 days ago
நபிகள் நாயகம் தன் மகள் பாத்திமா அம்மையார் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். திருமணமான பிறகு ஒருமுறை தந்தையைக் காண வந்த மகள்,“எனக்கு வீட்டில் வேலை கடுமையாக இருக்கிறது. உதவிக்கு சிலர் வேண்டும். உங்களுடன் உள்ள கைதிகளில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்கள்,” என்றார். நாயகம் அவரிடம், “மகளே! நம் வேலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும், நாம் தான் செய்தாக வேண்டும். உடல் களைப்படையும் நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய். வேலையை முடிப்பதற்குரிய சக்தியைக் கேள். அவன் உனக்கு அருள் செய்வான்,” என்று கூறி அனுப்பி வைத்தார். குடும்பம் வேறு...பொது விஷயம் வேறு...என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபிகள் நாயகம்.