உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம்

ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோவிலில், மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம், நேற்று துவங்கியது. நேற்று காலை, 11:00 மணிக்கு, கோவிலில் இருந்து தங்கபல்லக்கில் எழுந்தருளிய ஆண்டாள், மாடவீதிகள் வழியாக, ராஜகோபுரம் முன் எழுந்தருளினார். அங்கு அரையர்சேவை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, எண்ணெய்காப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 3:00 மணிக்கு, எண்ணெய்காப்பு மற்றும் திருமஞ்சனம் முடிந்து, சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜன., 15 வரை, மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !